நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வீல் சேர் பற்றாக்குறை காரணமாக மாற்றுத்திறனாளி முதியவர் தவழ்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு நோயாளிகளை அழைத்துச் செல்ல வீல் சேருடன் பணியாளர்களும் பணியில் இருப்பது வழக்கம்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் சிகிச்சைக்குபின் வீல் சேர் வழங்கப்படாததால் பெரும் சிரமத்துடன் தவழ்ந்துகொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்னர்.