நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவிலான நெல்லையப்பர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் மூலத் திருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடி பட்டம் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
அதனைத்தொடந்து கொடி மரத்திற்கு பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.