என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்எல்சி நிறுவனத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளை கூட என்எல்சி வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
என்.எல்.சி.யின் லாபம் அதிகரிக்க தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலே காரணம் என குறிப்பட்டுள்ள ராமதாஸ், என்.எல்.சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக சேர்ந்து 25 ஆண்டுகளாக பணி செய்தும் ஒப்பந்த தொழிலாளராகவே ஓய்வு பெறும் அவலநிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி.யின் லாபம் அதிகரிக்க பாடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.