பாராலிம்பிக் பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் நிதேஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நிதேஷ் குமார், பிரிட்டனின் டேனியலை எதிர்கொண்டார். இதில் 21-14, 18-21, 23-21 என்ற கணக்கில் டேனியலை வீழ்த்தி நிதேஷ்குமார் தங்கப் பதக்கம் வென்றார்.
இது இந்தியா வெல்லும் இரண்டாவது தங்கப்பதக்கம் ஆகும். ஏற்கனவே துப்பாக்கிச்சுடுதலில் அவ்னி லேகரா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.