ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டதால் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, தென் மத்திய ரயில்வே 9 ரயில்களை வெவ்வேறு மார்க்கத்தில் திருப்பிவிட்டுள்ளது. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், 5 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உதவி மற்றும் கூடுதல் தகவல் தேவைப்படுவோர், குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.