தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 28 கோடி மதிப்பிலான சாரஸ் என்ற போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் திரேஸ்புரத்தில் இருந்து வடபகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ரோந்து சென்றபோது, படகுக்காக காத்திருந்த மூன்று பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் அமல்ராஜ், நிஷாந்தன் மற்றும் விக்டர் என விசாரணையில் தெரியவந்தது.அவர்களிடம் இருந்து, கஞ்சா செடியின் பிசினில் இருந்து தயாரிக்கப்படும் 56 கிலோ எடை கொண்ட சாரஸ் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.