மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்றது.
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன். இவர் சினிமாவில் மூன்று படங்களில் நடித்து இருந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இந்த படத்தினை இயக்க உள்ளார். இந்தப் படத்தின் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்
இந்த படத்தின் பூஜை பெரியகுளத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. நடிகர் சரத்குமார், கதாநாயகி, இயக்குனர், பட தயாரிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். தேனி மாவட்ட கிராமத்து பின்னணியில் இந்த படம் எடுக்கப்பட உள்ளதால் படப்பு பிடிப்பு முழுவதும் தேனி மாவட்டத்தில் நடைபெறுகிறது.