நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், முன் ஜாமின் கோரி நடிகர்கள் முகேஷ், சித்திக் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மலையாள சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில், நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா ஆகியோர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்ஜாமின் கோரி நடிகர்கள் முகேஷ், சித்திக் ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நடிகரும்,
எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது 3 நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.