கனடா எல்லை வழியே அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் காலகட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு இதே காலகட்டத்தில் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூனில் மட்டும் 5 ஆயிரத்து 152 இந்தியர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.