திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே உரிய பாதுகாப்பில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பியை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலை நிலவுவதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, பாதுகாப்பில்லாத சூழல் திமுக ஆட்சியில் உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பெண் டிஎஸ்பியை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.