டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ அண்மையில் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
இதைப் பரிசீலித்த நீதிபதி, விசாரணை நிறைவில், கெஜ்ரிவால் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.