எண்ணெய் வளம் மிக்க புருனே! : உலகின் பணக்கார நாட்டிற்கு பிரதமர் மோடி பயணம் ஏன்?
Aug 24, 2025, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எண்ணெய் வளம் மிக்க புருனே! : உலகின் பணக்கார நாட்டிற்கு பிரதமர் மோடி பயணம் ஏன்?

Web Desk by Web Desk
Sep 4, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி புருனே பயணம் மேற் கொண்டிருக்கிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் புருனேவுக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும். தூதரக உறவுகள் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த பயணம் முக்கியத்துவம் வந்ததாக கருதப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு…!

தென்கிழக்கு ஆசியாவில், போர்னியோ தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளஒரு சிறிய நாடுதான் புருனே. வடக்கே தென் சீனக் கடலும் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கில் மலேசியாவின் சரவாக் மாநிலம் புருனேவின் எல்லைகளாக அமைந்துள்ளன.

1888 முதல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த புருனே, மலேசியாவுடன் சேராத ஒரே மலாய் மாநிலமாக விளங்கியது. 1984 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற புருனே, காமன்வெல்த் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் (ASEAN) உறுப்பினராக உள்ளது.

சுமார் 4, 60,000 மக்கள் தொகை கொண்ட புருனேவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு, டுசுன், பெலெய்ட், கெடையன், முருத் மற்றும் பிசாயா (பிசாயா) உள்ளிட்ட பல பழங்குடி குழுக்களை உள்ளடக்கிய மக்களே உள்ளனர்.

பத்தில் ஒரு பங்கு சீனர்கள் இருக்கும் புருனேவில், மலாய் அல்லாத பழங்குடியினரும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் ஆசியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து தற்காலிக தொழிலாளர்களும் வாழ்ந்து வருகிறார்கள்.

புருனேயின் அதிகாரப்பூர்வ மொழியாக மலாய் இருந்தாலும், இரண்டாவது பெரிய மொழியாக ஆங்கிலமே இருந்து வருகிறது. சீனர்களுக்காக புருனே பள்ளிகளில் மாண்டரின் மொழியும் கற்றுத் தரப்படுகிறது.

சன்னி முஸ்லிம்களே அதிகமாக வாழும் புருனேவின் மக்கள் தொகையில் 15 வயதுக்குட்பட்டவர்களே அதிகமாக உள்ளனர். இறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ள நாடாக புருனே உள்ளது.

புருனே சுல்தான் மற்றும் அவரது குடும்பம் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களாக தொடர்ந்து இருந்து வருவதால், இந்த நாடு உலகப் புகழ்பெற்றதாக திகழ்கிறது. மேலும் புருனேயின் குடிமக்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்பதே இந்நாட்டின் சிறப்பாகும்.

உலகின் மிகப்பெரிய அரண்மனையில் வசிக்கும் சுல்தான் போல்கியா சுமார் 30 பில்லியன் டாலர் சொத்துகளுக்குச் சொந்தக்காரர். சுமார் 7,000 கார்கள் வைத்திருக்கும் சுல்தான் போல்கியா ,தனது தந்தை சர் ஹாஜி உமர் அலி சைஃபுதினின் பதவி விலகலுக்குப் பிறகு 1968 ஆம் ஆண்டு புருனேவின் அரியணையில் ஏறினார்.

உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவரான சுல்தான் போல்கியா, தனது தேசத்தின் மீது முழுமையான அதிகாரம் கொண்ட மன்னராகவும் விளங்குகிறார். 1984 ஆம் ஆண்டு தன்னை நாட்டின் பிரதமராக நியமித்துக் கொண்ட சுல்தான் போல்கியா 1991 ஆம் ஆண்டில் , அவர் மலாய் இஸ்லாமிய முடியாட்சியை உருவாக்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.

புருனே, இஸ்லாமிய ஷரியா சட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் கிழக்கு ஆசியா நாடாகும். மேலும் ஓரின சேர்க்கை குற்றத்துக்காக கொலைத் தண்டனையை புருனே சட்டமாக வைத்திருக்கிறது.

1930-களிலேயே புருனேவுக்கு இந்தியர்கள் சென்றிருக்கிறார்கள். இன்றைய நிலவரப் படி சுமார் 14,500 இந்தியர்கள் புருனேயில் வசிக்கின்றனர். பெரும்பாலான இந்தியர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில், கட்டுமானம் மற்றும் சில்லறை வணிகங்களில் தொழிலாளர்களாக பணி புரிந்து வருகிறார்கள்.

மேலும் மருத்துவர்கள்,ஆசிரியர்கள்,பொறியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் இந்தியர்களில் சிலர் வேலை பார்த்து வருகிறார்கள். புருனேவின் ஜவுளித் துறை வளர்ச்சியில் இந்திய தொழிலதிபர்களின் பங்கு கணிசமானது.

இந்தியாவின் ‘Act East’’ கொள்கை மற்றும் அதன் இந்திய-பசிபிக் உறவுகளில் புருனே ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. மேலும் 2012 முதல் 2015 வரை இந்தியாவுக்கான ஒருங்கிணைப்பாளராக இருந்த புருனே, இந்தியாவை ஆசியானுடன் நெருக்கமாக கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தது. கடந்த ஆண்டு ,இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 195.2 மில்லியன் அமெரிக்க டாலராகும்.

இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி புருனே பயணம், இராணுவம் எரிசக்தி, விண்வெளித் துறை, திறன் மேம்பாடு கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags: Oil-rich Brunei! : Why Prime Minister Modi's visit to the world's richest country?
ShareTweetSendShare
Previous Post

தனி நாடாகும் பலுசிஸ்தான்? : உள்நாட்டு போர் விளிம்பில் பாகிஸ்தான்!

Next Post

மக்காச்சோளத்தை அதிகம் இறக்குமதி செய்யும் இந்தியா பின்னணி என்ன ?

Related News

டெல்லி வந்த பிஜி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 16000 கன அடியாக உயர்வு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அருகே பேட்டரி கார் அணிவகுப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாதது குறித்த கேள்வி – திணறிய சுகாதாரத்துறை அமைச்சர்!

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies