காங்கோ நாட்டில் சிறைச்சாலையை உடைத்து தப்ப முயன்ற 129 கைதிகள் கொல்லப்பட்டனர்.
கின்ஷாசாவில் உள்ள மத்திய மக்காலா சிறையை உடைத்து கைதிகள் தப்ப முயன்றனர். இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
கூட்ட நெரிசலில் ஏற்பட்ட மூச்சுத் திணறலின் காரணமாக 105 பேர் உயிரிழந்தனர். மேலும், சிறை நிர்வாக கட்டடம் மற்றும் உணவுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் கைதிகள் யாரும் தப்பிச் செல்லவில்லை என மக்காலா சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.