சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி தேதி மற்றும் நடைபெறும் இடம் பற்றிய தகவல்களை அறிவித்துள்ளது.
அதன்படி ஒன்-ஆஃப்ட் டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி துவங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஜூன் 16 ஆம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.