கோவை மாவட்டம் அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தின்போது, அலட்சியமாக பதிலளித்த சார் பதிவாளரை கேள்விகளால் துளைத்தெடுத்த விவசாயிகளின் வீடியோ வைரலாகி வருகிறது.
அன்னூரில் சிப்காட் அமைக்க திட்டமிட்ட இடங்களை பத்திரப்பதிவு செய்த தடை விதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், அன்னூர் சார் பதிவாளர் செல்வ பாலமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சட்ட ரீதியாக வழக்கு தொடுத்தால் நீதிமன்றம் வர நேரிடும் என விவசாயிகள் எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.