கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், ஒரே இரவில் 2 கொலை சம்பவங்கள் அரங்கேறியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சின்னகண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவரை, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், அவரது சகோதரர், கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
காட்டுக் கொட்டாய் பகுதியில், தனது வீட்டின் முன் படுத்து உறங்கிய ராஜகோபால் என்ற முதியவரை, மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்தனர்.
ஒரே இரவில் அரங்கேறிய இந்த 2 கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.