மகாராஷ்டிராவில் உள்ள சிவாஜி சிலை துருப்பிடிக்காத எஃகால் செய்யப்பட்டிருந்தால் இடிந்து விழுந்திருக்காது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட் கோட்டையில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை கடந்த மாதம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சிற்பி ஜெய்தீப் ஆப்தேவுக்கு சிந்துதுர்க் போலீசார் லுக்அவுட் நோட்டீஸை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி துருப்பிடிக்காத எஃகு பயன்படுத்துவது கடலோரப் பகுதியில் அமைக்கப்படும் கட்டங்களின் உள்கட்டமைப்பைப் பாதுகாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.