திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுபிகாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி மர்ம முறையில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 4 மாதங்களாக சுமார் 120 பேரிடம் விசாரணை நடத்தியும், ஜெயக்குமார் மர்ம மரணம் கொலையா? தற்கொலையா? என்று தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சுபிகாரிடம் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திசைவேளை பகுதியை சேர்ந்த சுபிகார், உயிரிழந்த ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர் என்பதுடன், அவருடன் இணைந்து பல தொழில்கள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.