இடுக்கி மற்றும் செறுதோணி அணைகளை தண்ணீர் திறக்கும் நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மின்வாரிய துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி தலைமையில் சட்டசபை ஆய்வு குழு இடுக்கி அணையை நேரில் பார்வையிட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.
ஓணம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின்போது மட்டும் அணையை பார்வையிட கேரளா அரசு இதுவரை அனுமதி அளித்து வந்தது குறிப்பிடதக்கது.