ஆந்திராவில், கிருஷ்ணா நதிக்கு வரும் வெள்ள நீரின் அளவு குறைந்ததால், விஜயவாடாவில் சூழ்ந்திருந்த வெள்ளம் வடிய துவங்கி உள்ளது.
இதனால், அரசு முகாம்களில் தங்கி இருந்த மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். ஏற்கனவே, வெள்ள பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஜேசிபி வாகனத்தில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டிறிந்தார்.
அப்போது, அடுக்குமாடி வீடுகளில் இருப்பவர்களுக்கு மட்டும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதாக சிலர் புகார் தெரிவித்தனர்.