தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி செயல்பட்டு வருவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : எனக்கு அந்த சம்பவம் போல் எதுவும் நடந்ததில்லை. நான் நான்கு தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறேன். எல்லா துறைகளிலும் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படுகிறது. அனைத்து துறைகளிலும் ஹேமா கமிட்டி இருக்க வேண்டும்.
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என சினிமா துறையை மட்டும் பிடித்து கொள்கிறார்கள்.
ஏன் சினிமாவில் மட்டும் ஹேமா கமிட்டி இருக்க வேண்டும். பெண்கள் பணியாற்றக்கூடிய ஒவ்வொரு துறைகளிலும் ஹேமா கமிட்டி போல் இருக்க வேண்டும்.
தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி என தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழ் நடிகர் சங்கத்தில் எந்த தமிழ் நடிகையும் தற்பொழுது வரை புகார் தெரிவிக்கவில்லை.
ஒரு நடிகை வந்து ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவிக்கும் போது யாராக இருந்தாலும் முதலில் எச்சரிக்கை விடப்படும் எனவும் அதன் பிறகு விசாரணை கமிட்டி அமைத்து தொடர்ந்து பேசப்படும் என தெரிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மொத்தமாக ஏழு தீர்மானங்கள் உள்ளது என தெரிவித்தார்.
எங்களிடம் வந்து பேசுங்கள். உங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் உள்ளோம். உங்கள் பிரச்சினைகளுக்.கு தீர்வு காண நாங்கள் உள்ளோம்.
இதற்காக தான் விசகா கமிட்டி மற்றும் நடிகர் சங்கம் உள்ளது. இல்லை என்றால் மாநில ஆணையத்திடம் சென்று புகார் அளிக்கலாம் என குஷ்பு தெரிவித்தார்.