பாரா ஒலிம்பிக் தொடரின் ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் ஆண்கள் பாரா ஜூடோ விளையாட்டின் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் வீரரான எலிடன் டி ஒலிவெய்ராவை வீழ்த்தி இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலப் பதக்கத்தை கைபற்றினார்.
இதன்மூலம் 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 25-ஆக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.