பாலியல் குற்றம் சாட்டப்பட்ட கேரள நடிகரும், எம்.எல்.ஏவுமான முகேஷுக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக வெளியான ஹேமா கமிஷன் வெளியிட்ட அறிக்கை மலையாள திரை உலகை, புரட்டிப்போட்டு உள்ளது. இந்த அறிக்கை வெளியானதை அடுத்து முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் மீது நடிகைகள் தொடர்ந்து பாலியல் புகார்களை தெரிவித்தனர்.
அந்த வகையில் மலையாள நடிகரும், கொல்லம் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மற்றும் நடிகர் இடவேல பாபு ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக முன் ஜாமீன் வழங்கக்கோரி எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் இருவரும் தனிதனியாக மனுதாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவருக்குமே முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.