அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிருக்கான பிரிவில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் 1-க்கு 6, 6-க்கு 4, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலா வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றி மூலம் இவர், ஏற்கனவே இறுதிசுற்றுக்குள் நுழைந்த அரினா சபலென்கா உடன் 8-ம் தேதி பலப்பரீட்சை நடத்துகிறார்.