கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கை மூடி மறைக்க மேற்கு வங்க அரசு முயற்சிப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என டிஎன்ஏ அறிக்கை வெளியான நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சம்பித் பத்ரா, தங்களுக்கு காவல் துறை லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக பெண் மருத்துவரின் தந்தை ஏற்கெனவே கூறியதை நினைவுகூர்ந்தார்.
இதன்மூலம் பணம் கொடுத்து அனைத்தையும் மூடி மறைக்க மம்தா பானர்ஜி அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அவர், ஒருவர் லஞ்சம் கொடுக்க நினைக்கிறார் என்றால், அவரிடம் தவறு உள்ளது என்றுதான் அர்த்தம் என தெரிவித்தார்.