விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் நிலக்கோட்டை மலர்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இந்த பூக்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
அதன் படி மல்லிகைப் பூ ஒரு கிலோ 800 முதல் 900 ரூபாய் வரைக்கும், முல்லை 500 ரூபாயாகவும், பிச்சிப்பூ 400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.