பாரிஸ் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் பிரவீன் குமார் தங்கப்பதக்கம் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற உயரம் தாண்டும் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார். டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பிரவீன் குமார் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.