நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் வஸ்த்ராபூர் நா மகாகணபதி கோவிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, நடைபெற்றது.
அதேபோல மகாராஷ்டிர மாநிலம் மும்பை ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு,மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டனர்.