விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “முழுமுதற் கடவுள் எம்பெருமான் விநாயகப் பெருமான் அவதரித்த தினம் கொண்டாடும் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரது வாழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகிட, வாழ்வில் மென்மேலும் உயர, விநாயகப் பெருமான் அருள் துணை நிற்கட்டும்! இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.