விநாயகர் சதுர்த்தி தினத்தை ஒட்டி மயிலாடுதுறையில் சூரிய ஒளிக்கதிர்களை பயன்படுத்தி விநாயகரின் உருவத்தை வரைந்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மயிலாடுதுறையை சேர்ந்த விக்னேஷ் என்ற கலைஞர், சூரிய ஒளிக்கதிர்களை குவித்து அதன் மூலம் அழகான ஓவியங்களை வரைந்து, பல விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது மரப்பலகையில் விநாயகரின் ஓவியத்தை சூரிய ஒளி மூலம் வரைந்து அசத்தியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.