மத்தியப்பிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் பயணிகளின் விரைவு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தூர் – ஜபல்பூருக்கு இடையே இயக்கப்படும் ஓவர்நைட் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ஜபல்பூரில் புறப்பட்ட சிறிது தூரத்திலே ரயிலின் இரண்டு பெட்டிகள் இருப்புப் பாதையை விட்டு விலகி தடம் புரண்டது.
இதையறிந்த அதிகாரிகள் உடனே ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் தகவலறிந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டியை இருப்புப் பாதையில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.