வரும் 2036-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதே மத்திய அரசின் இலக்கு என பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற 44-ஆவது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அதற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு மும்மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.
ஒலிம்பிக்கில் இந்தியா சாதனை படைக்கும் நோக்கில் 5 ஆயிரம் வீரர்களுக்கும் 3 ஆயிரம் வீராங்கனைகளுக்கும் 34 பிரிவுகளில் சர்வதேச அளவில் பயிற்சியளித்து வருவதாக கூறிய ஜெ.பி. நட்டா, இதன்மூலம் சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
வரும் 2036-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டுமென்ற பிரதமர் மோடியின் விருப்பத்தை மேற்கோள்காட்டிய அவர், இந்த இலக்கை எட்ட ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கடுமையாக உழைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.