17-வது பாரா ஒலிம்பிக் தொடரின் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நவ்தீப் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் தொடர் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது.இந்த தொடரில் நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F41 இறுதிப்போட்டியில் இந்திய வீரரான நவ்தீப் தங்கம் வென்று அசத்தினார்.
இதேபோல் பாரா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை சிம்ரன் சர்மாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா பங்கேற்றார். இவர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 24.75 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார்.