புதுக்கோட்டை மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு மத்திய, மாநில அரசுகள் முடிவுகட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கடிதம் எழுதுவதை வாடிக்கையாக கொண்டுள்ள முதலமைச்சரின் செயல்பாடு பயனளிக்காது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.