2047 -ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க BIO-E3 கொள்கை பெரும் பங்கு வகிக்கக்கூடும் என சென்னை ஐ.ஐ.டி துணைபேராசிரியர் மெய்யப்பன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட BIO-E3 கொள்கை குறித்த விளக்கக் கூட்டம் சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அறிவியல் அறிஞர் அல்கா சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ஐ.ஐ.டி துணைபேராசிரியர் மெய்யப்பன் நுண்ணுயிரி தொழில்நுட்பம் மூலமாக 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதே மத்திய அரசின் நோக்கம் என தெரிவித்தார்.