பீகாரில் மகத் விரைவு ரயில் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு நிலவியது.
டெல்லியிலிருந்து பாட்னோ நோக்கி சென்ற மகத் விரைவு ரயில், பீகார் மாநிலம் துடிகஞ்ச் ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது திடீரென இரு பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டு, ரயில் பெட்டிகள் பிரிந்தன.
இதையறிந்த ஓட்டுநர்கள், சுதாரித்துக் கொண்டு ரயிலை சாதுரியமாக இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.