இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளை குரங்கம்மை அச்சுறுத்தி வந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவரது ரத்த மற்றும் சளி மாதிரி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.