உலக நாடுகள் சூடானுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வராதது அதிர்ச்சியளிப்பதாக உலக சுகாதர அமைப்பின் தலைவர் டெட்ரோசு அதானோம் தெரிவித்துள்ளார்.
வறட்சி, நோய்த்தொற்று, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றால் சூடான் மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார். சூடான் மக்கள் படும் இன்னல்களை விவரித்த அவர், இந்த கடும் நெருக்கடிகளை தடுக்க உலக நாடுகள் போதிய நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.