நடிகர் துல்கர் சல்மானின் 'காந்தா' திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்!
Sep 27, 2025, 10:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்!

Web Desk by Web Desk
Sep 9, 2024, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கரின் வேஃபேரர் (Wayfarer) இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸுடன் இணைந்து 60 வருடங்கள் பாரம்பரியம் மிக்க சுரேஷ் புரொடக்ஷன்ஸின் ஒரு அங்கமான ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தனது முதல்  படமான ‘காந்தா’ படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது.

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் ஸ்பிரிட் மீடியாவின் சினிமா தொடக்கத்திற்கு அற்புதமான விஷயம் எனப் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

படம் பற்றி நடிகர்- தயாரிப்பாளர் ராணா டகுபதி தெரிவித்திருப்பதாவது, “’காந்தா’வுக்காக வேஃபேரர் ஃபிலிம்ஸுடன் இணைந்திருப்பது இந்தத் படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. தரமான சினிமாவுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு, ஸ்பிரிட் மீடியாவில் எங்களின் பார்வையுடன் சரியாக ஒத்துப்போகிறது. சுரேஷ் புரொடக்ஷன்ஸின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவும், ஸ்பிரிட் மீடியாவுடன் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கவும் சிறந்த படமாக ‘காந்தா’ இருக்கும்” என்றார்.

வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனர்- நடிகர் துல்கர் சல்மான், “ஸ்பிரிட் மீடியாவுடன் இந்த அற்புதமான பயணத்தை ‘காந்தா’வுடன் தொடங்குவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது மனித உணர்வுகளின் ஆழத்தைப் படம் பிடித்து காட்டும் ஒரு அழகான கதை. நடிப்புத் திறனை வெளிக்காட்ட இந்தப் படம் நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு” என்றார்.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் கூறுகையில், “இதுபோன்ற திறமையான தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு பெருமை. ‘காந்தா’ மூலம், பார்வையாளர்களை கடந்த காலத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். சமகால உணர்வுகளை எதிரொலிக்கும் கதையாக இது இருக்கும்” என்றார்.

சுரேஷ் புரொடக்ஷன்ஸின் வளமான பாரம்பரியம், கலைசார்ந்த கதை சொல்லல், புதுமையான திரைப்படத் தயாரிப்பு மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக ‘காந்தா’ படம் உள்ளது.

இந்த புதிய சினிமா பயணத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் வெங்கடேஷ் டகுபதி கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ‘காந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

Tags: Rana Dagupathi's Spirit MediaSelvamani SelvarajRana's Spirit MediaDulquer's WayfarerGanda shootingganda
ShareTweetSendShare
Previous Post

ஓராண்டு பயிற்சிக்கு பின்னர் லெப்டினன்ட் அதிகாரிகளாக பொறுப்பேற்றுக்கொண்ட வீரர்கள் – சிறப்பு கட்டுரை!

Next Post

ஜம்மு- காஷ்மீரில் இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர்!

Related News

ரஷ்யாவை தாக்கினால் 3-ம் உலகப்போர் உருவாகும் : நேட்டோ அமைப்பிற்கு எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

தொடர் மழை : திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

அடிப்படை வசதிகள் இல்லாத அவலம் : உதகையில் சீரழிந்து வரும் சுற்றுலா தளங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பிறந்த நாள் – வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய நயினார் நாகேந்திரன்!

இந்திய மூதாட்டியை கொடுமைப்படுத்திய குடியுரமை அதிகாரிகள் : தவித்த வாய்க்கு தண்ணீர் தராத அவலம் – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழா – கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரார்த்தனை தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடு – மோகன் பகவத்

சூரத்தில் புல்லட் ரயில் நிலைய முன்னேற்ற பணிகள் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!

புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் – பிரதமர் மோடி

தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார்  புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

ஓமலூரில், பேரூராட்சி கடைகள் திமுகவினருக்கு மட்டும் வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கைது!

தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!

சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் – ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!

நாமக்கல் நகரில் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் – எச்சரித்து அனுப்பிய போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies