திருநெல்வேலியில் வைக்கப்பட்டிருந்த 84 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருநெல்வேலி நகரில் 84 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் நெல்லையப்பர் கோவில் முன்பு வந்து சேர்ந்தன.
பின்னர் மதுரை ஆதீன குருமஹா சன்னிதானம், விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து 84 விநாயகர் சிலைகளும் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கரைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.