போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களுக்கே ஆண் குழந்தை பிறக்கும் என்று பேசிய அமைச்சர் காந்தி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதா என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், முற்பிறவியில் பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று அமைச்சர் காந்தி கூறியிருப்பது மூடநம்பிக்கை பேச்சு இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆண்களாக பிறப்பது பாவமா என வினவியுள்ள அவர், அரசு பள்ளியில் பேசிய, மகாவிஷ்ணு மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன் என்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர்களிடம் மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில் பேசிய அமைச்சர் காந்தி மீது நடவடிக்கை எடுப்பாரா எனவும் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.