நைஜீரியாவில் இரண்டு டேங்கர் லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்ததில், 48 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் போதிய ரயில் வசதி இல்லாததால், பெரும்பாலும் டேங்கர் லாரிகள் வாயிலாகவே வர்த்தகப் போக்குவரத்து நடைபெறுகிறது. அந்த வகையில், ஆகே பகுதியில் எரிபொருள் ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி, மற்றொரு லாரி மீது மோதியதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில் 48 பேர் உயிரிழந்தனர்.
எரிபொருள் லாரியில் 50-க்கும் அதிகமான கால்நடைகள் இருந்த, அவை அனைத்தும் விபத்தில் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.