அமெரிக்க ஓபன் டென்னிஸ் lதொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சின்னர் உடல்நிலை சரியில்லாத தனது அத்தைக்கு கோப்பையை அர்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஓபன் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
முதல் நிலை வீரரான இத்தாலியின் சின்னர், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஹாரி ப்ரிட்ஸை எதிர்கொண்டார். அப்போது 6-3, 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் பிரிட்ஸை வீழ்த்தி, சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த போட்டிக்காக கடும் பயிற்சி மேற்கொண்டதாக தெரிவித்துள்ள சின்னர், இந்த கோப்பையை உடல் நிலை சரி இல்லாத அத்தைக்கு அர்பணிப்பதாக கூறியுள்ளார்.