நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார். முன்னதாக, ஆர்த்தி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.