ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் இடம் பெற்ற மனசிலாயோ பாடலின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்தும், மஞ்சு வாரியரும் அமர்ந்திருக்கும் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.