குரங்கம்மை பரவலைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநில, யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் அபூர்வ சந்திரா கடிதம் எழுதியுள்ளார்.
ஆப்பிரிக்க கண்டத்தை குரங்கம்மை தொற்று அச்சுறுத்திய நிலையில், சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார மையம் அறிவித்தது. இந்தியாவிலும் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி ஏற்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.