நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் முதல் பாடவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது.
இந்நிலையில் மனசிலாயோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக ரஜினிகாந்தும், மஞ்சு வாரியரும் அமர்ந்திருக்கும் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை பின்னணி பாடகர் மலேசிய வாசுதேவன் பாடியுள்ளார். ஏஐ தொழில் நுட்பத்தில் அவர் பாடுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது.