கதி சக்தி விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்துடன் இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம் - பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைய உதவும் என ராஜ்நாத்சிங் கருத்து!
Oct 17, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கதி சக்தி விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்துடன் இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம் – பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைய உதவும் என ராஜ்நாத்சிங் கருத்து!

Murugesan M by Murugesan M
Sep 9, 2024, 06:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கதி சக்தி விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்துக்கும், விமானப் படைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை  தங்கள் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக, டெல்லியில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் வதோதராவில் உள்ள விரைவு சக்தி விஸ்வவித்யாலயாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு சேவைகளும் சரக்கு போக்குவரத்து துறையில் உயர் நிபுணத்துவத்தைப் பெற உதவும். இது பிரதமரின்விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் 2021 மற்றும் தேசிய தளவாடக் கொள்கை  2022 அடிப்படையில், தளவாட செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்களில் உள் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதை உறுதி செய்யும். தேசிய வளர்ச்சித் திட்டங்களுக்கு திறம்பட பங்களிக்கும்.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறையில் ‘தற்சார்பு’ தொலைநோக்குடன் ஒத்திசைவாக ஆயுதப்படைகளின் தளவாட போக்குவரத்தை மேலும் வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும் என தெரிவித்தார்.

தளவாடங்கள் என்பது இனி ஆயுதப்படைகளின் ஆதரவு செயல்பாடு மட்டுமல்ல, ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்பில் ஒரு முக்கிய காரணியாக உருவாகி வருகிறது என்று அவர் கூறினார்.

பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைவது என்ற அரசின் தொலைநோக்கு பார்வையை அடைவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பயனளிக்கும் என்பதை நிரூபிக்கும் என்று  ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

நமக்கு தளவாட போக்குவரத்து நிபுணத்துவம் தேவைப்பட்டால், விரைவு சக்தி விஸ்வவித்யாலயா போன்ற நமது சொந்த வளங்களிலிருந்து அதன் பயிற்சியைப் பெற வேண்டும். நமக்கு உபகரணங்கள் தேவைப்பட்டால், அதை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். தற்சார்பாக இருப்பதன் மூலம் மட்டுமே வலுவான இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

நிஜ உலக வழக்கு ஆய்வுகள் மூலம் அனுபவ கற்றலுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழங்கல் குறித்து, ஆயுதப்படை வீரர்களின் தலைமை, மேலாண்மை மற்றும் செயல்பாட்டு அனுபவம் மூலம், நவீன போர்முறையின் மாறும் தேவைகளை பூர்த்தி செய்யும் புதிய தலைமுறை தளவாட நிபுணர்கள் மற்றும் மேலாளர்களை வடிவமைக்க விரைவு சக்தி விஸ்வவித்யாலயா உதவும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

விரைவு சக்தி விஸ்வவித்யாலயா ஆயுதப்படைகளுக்கு அதிநவீன சரக்கு போக்குவரத்து கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுடன் அதிகாரம் அளிப்பதில் முக்கிய பங்குதாரராக செயல்படும் என்று ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், விமானப்படை தளபதி, ராணுவ தளபதி, பாதுகாப்பு செயலாளர், ரயில்வே வாரிய தலைவர் மற்றும் விரைவு சக்தி விஸ்வவித்யாலயா துணை வேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: Rajnath SinghIndian Air ForceGati Shakti Vishwavidyalayalogistics system
Share
Tweet
SendShare
Previous Post

நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது!

Next Post

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies