திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஓய்வு பெற்ற நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் கோயில் நகைகள் சரி பார்க்கும் பணி துவங்கியுள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் தங்கம், வெள்ளி, ரொக்கம் உள்ளிட்டவற்றை மாதம் இருமுறை எண்ணப்பட்டு வங்கியில் டெபாசிட் செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜு தலைமையில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ரவீந்திர பாபு, மாலா ஆகியோர் முன்னிலையில் நகைகள், பணம் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.