8 மாதங்களில் 1,36,000 பேர் பணி நீக்கம் - ஐ.டி நிறுவனங்களில் தொடரும் ஆட்குறைப்பு நடவடிக்கை!
May 19, 2025, 12:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

8 மாதங்களில் 1,36,000 பேர் பணி நீக்கம் – ஐ.டி நிறுவனங்களில் தொடரும் ஆட்குறைப்பு நடவடிக்கை!

Web Desk by Web Desk
Sep 10, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 8 மாதங்களில், 422 தொழில்நுட்ப நிறுவனங்கள் 1 லட்சத்து 36,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில்  பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.

ஒட்டுமொத்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்லாத் துறைகளும் கணிசமான வளர்ச்சியைக் காண்கிறது. ஆனால் தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் இருப்பதால், சிறிய சதவீத பணிநீக்கம் கூட ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றன.

Intel, IBM மற்றும் Cisco போன்ற பெரிய நிறுவனங்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடந்த 8 மாதங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன.

2025ம் ஆண்டுக்கான 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான செலவினக் குறைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்டெல் நிறுவனம் 15 சதவீத ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.

சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் சுமார் 7 சதவீத பேரை உடனடியாக பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது.

சீனாவில் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதால், ஐபிஎம் நிறுவனம் சுமார் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

ஜெர்மனி நிறுவனமான Infineon, 1,400 பேர்களைப் பணியில் இருந்து நீக்க முடிவெடுத்திருக்கிறது. மேலும் 1,400 ஊழியர்களைக் குறைந்த தொழிலாளர் செலவு உள்ள நாடுகளுக்கு இடமாற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

ஆக்‌ஷன் கேமரா உற்பத்தியாளரான GoPro நிறுவனம் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அதன் ஊழியர்களில் சுமார் 15 சதவீத ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம், தனது ஆப்பிள் புக்ஸ் ஆப்ஸ் மற்றும் ஆப்பிள் புக் ஸ்டோர் குழுக்களை உள்ளடக்கிய அதன் சேவைக் குழுவிலிருந்து சுமார் 100 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

டெல் டெக்னாலஜிஸ் அதன் விற்பனைக் குழுக்களை மறுசீரமைப்பதாகக் கூறி, சுமார் 12,500 பணியாளர்களை அதாவது அதன் உலகளாவிய பணியாளர்களில் 10 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூருவை தளமாகக் கொண்ட ஒரு துணி ஸ்டார்ட்அப் நிறுவனமான ரேஷாமண்டி, அதன் முழு பணியாளர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது.

பெங்களூரில் உள்ள சமூக ஊடக நிறுவனமான ஷேர்சாட், கடந்த இரண்டாண்டு செயல்திறன் மதிப்பாய்வைத் தொடர்ந்து, சுமார் 5 சதவீத பணியாளர்களை குறைத்துள்ளது.

இணைய தேடல் நிறுவனமான பிரேவ், பல்வேறு துறைகளில் இருந்து 27 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பிரேவ் நிறுவனத்தின் மொத்தமுள்ள 191 ஊழியர்களில் இது 14 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த அக்டோபரில் பிரேவ், அதன் பணியாளர்களில் 9 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்திருந்தது.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல ,இந்த ஆண்டின் முதல் நான்கு வாரங்களில், மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள், டிக்டோக் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸ் உட்பட கிட்டத்தட்ட 100 தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டாக சுமார் 25,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன. சர்வதேச அளவிலும் ஆண்டு முழுவதும் இந்த போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: ibmlayoffstech companiesIntelCisco
ShareTweetSendShare
Previous Post

குற்றால அருவி அருகே மலைப்பாம்பு – குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

Next Post

பாஜகவை விமர்சிக்க ராகுல் காந்திக்கு உரிமை இல்லை – பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

Related News

எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட்டில் வெள்ள நீர் : வியாபாரிகள் அவதி!

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை : உலக சுகாதார அமைப்புக்கு மருத்துவர்கள் கடிதம்!

புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்திய விசிக கட்சியினர்!

முல்லைப்பெரியாறு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல்!

பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : மூவர்ண கொடியை ஏந்தி அமித்ஷா பேரணி!

Load More

அண்மைச் செய்திகள்

வரும் 23-ம் தேதி ஆசாதி திரைப்படம் வெளியீடு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : குஜராத் டைட்டன்ஸ் வெற்றி!

வாடிவாசல் எதிர்பார்ப்புக்கெல்லாம் பொறுப்பாக முடியாது – வெற்றிமாறன்

ஐபிஎல் போட்டி : 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

வயது வித்தியாச விமர்சனத்துக்கு பதிலளித்த நடிகர் மிதுட்டி!

மீண்டும் தமிழில் நடிக்க வரும் ஆஷ்னா சவேரி!

தனுஷ் படத்தில் மட்டுமே உருவ கேலி செய்யப்படவில்லை – வித்யுலேகா

ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies